வாழ்க்கைச் சித்திரங்கள் – அப்பா கொடுத்த கல்வி

Published in Amazon as an ebook in September,2020 and later unpublished there in January,2023 https://lalithasitaraman.files.wordpress.com/2023/07/appa-kodutha-kalvi.pdf

மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!

லலிதா சீதாராமன் ( 27.06.2019 அன்று எழுதப்பட்டது ) சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றில்,  சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள்.  ஒரு அரசியல் தலைவர்  வீரவாள் என்ற சொல்லை  உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர்  வீரவாள் என்று சொல்லி ‘அவாளை’ அழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின.Continue reading “மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!”

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

லலிதா சீதாராமன் (08-02-2018 அன்று எழுதப்பட்டது) தன் தந்தத்தையே எழுதுகோலாக உபயோகித்த விநாயகர் மற்றும் தம் எழுத்துக்களால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய சமயக்குறவர் நால்வர், ஆண்டாள், அருணகிரிநாதர் போன்ற பக்த கவிகள் ஆகியவர்களின் சந்நிதிகளில் நிற்கும்போது நான் அவர்களிடம் என் எழுத்துக் கனவுகளையும் முன்வைப்பதுண்டு. தற்போது ஒரு மாத காலமாக, ஆண்டாளும் அவளது படைப்புக்களான திருப்பாவையும்  நாச்சியார் திருமொழியும்   மீண்டும் மீண்டும் பேசப்பட, இலக்கியம், காவியம், ரஸம் முதலியவற்றைப் பற்றி என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த கருத்துக்கள் என்னைContinue reading “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!”