Home

தளத்தின் ஆசிரியர் சமீபத்தில் Amazon.in தளத்தில் பிரசுரித்திருக்கும் ‘வாழ்க்கைச்சித்திரங்கள் – அப்பா கொடுத்த கல்வி’   என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே :

கடவுள் வாழ்த்தும் குரு வந்தனமும்

வாசநறு மலரளித்து விநாயகனையும் குலதெய்வம் முருகனையும் வணங்கி

மாசில் வீணையின் இசையென மனவமைதி தரும் ஈசன் இணையடியையும்

தனமும் கல்வியும் தளர்வறியா மனமுந்தரும் அன்னையின் இன்னருளையும்

வினைகளகலத் தெய்வத்தின் குரலில் குறிப்பளிக்கும் குருவையும் கும்பிட்டு

குறையேதுமில்லை கோவிந்தாவென வாழ்ந்த நினைவுகளைச் சூரியனிடம்

அர்ப்பணித்துச் சென்னையிலிருந்து இரண்டாயிரத்திருபதில் எழுதுகிறேன்.

……………………..

“எதுவும் கிடைத்தற்கரியது என்ற நிலைக்குப் போகும் போதுதான் அதன் அருமை நமக்குப் புரியும்! ……”

……………………..

“முடிவாக, அம்மா ‘இந்த ஒரு வருடம் (பி.யு.ஸி.) மட்டும் ஆசைக்குப் படிக்கட்டும்’ என்றார். ……”

…………………………

பி.யு.ஸி வகுப்பில் என்னுடைய படிப்பில் ஏற்பட்ட தீவிர மாறுதலுக்கு நான் இலக்கிய ரீதியாக இரண்டு மேற்கோள்களைக் காட்டமுடியும். பாரதியார் சுதந்திரப் பயிர்’ என்ற தலைப்பில் பாடிய ‘வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?’ என்ற வரியும் …………………”

……………………….

“என்னால் மீண்டும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு சூடு பிடிக்க ஆரம்பிக்கும் முன் இரண்டு அதிசயங்கள் நிகழ்ந்தன. கடவுள் இந்த மாதிரி அதிசயங்களை என் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களின் கடைசி நொடிகளில் நிகழ்த்தித் தன்னுடைய தரிசனத்தை எனக்கு அளித்திருக்கிறார். “

……………………

”  சில வாரங்களுக்குப் பிறகு ஒரு பிற்பகலில் கல்லூரி முதல்வர் என்னை அழைப்பதாகக் கூறினார்கள். நான் அங்கே சென்ற போது முதல்வருக்கு எதிரில் என் அப்பா அமர்ந்திருந்தார். அப்பா என்னை ஆங்கில மீடியத்துக்கு மாற்ற விரும்புவதாக முதல்வர் கூறினார். …..”

………………………..

“நான் முதல் மதிப்பெண் வாங்கிய போதெல்லாம் எனது திருமணப் பிரச்சினை அம்மாவின் மனதில் பூதாகாரமாகத் தெரிந்தது போலத் தோன்றவே  நான் அப்போதிலிருந்தே சற்று அடக்கி வாசிக்கக் கற்றுக் கொண்டேன். …….”

………………………..

“இவர்களுடைய வேகத்தைக் கண்டு திகைத்துக் கொண்டே நான் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்தேன்…..”

………………………..

“அவர்கள் உள்ளே வரும்போதே நான் பிள்ளையைக் கவனிக்க நேர்ந்தது. அவர் என் தாத்தாவிடம் கை கொடுத்து ‘சீதாராமன்’ என்று அறிமுகம் செய்துகொண்ட போது நட்புணர்வும் பெருந்தன்மையும் அவரது முகத்தில் வெளிப்பட்டன…….”

………………………..

“அவர்கள் தெரிவித்த சம்மதத்தால் எனக்கு ஏற்பட்ட நன்றிப்பெருக்கு வாழ்க்கையின் பல இழுபறிகளுக்கிடையில் அழியாமல் என்னுடைய மணவாழ்க்கையை உறுதிப்படுத்தும்  காரணிகளில் ஒன்றாக நின்றது…..”

……………………

“நான் என் வாழ்க்கைச் சித்திரங்களை ‘அப்பா கொடுத்த கல்வி’,‘இல்லறம்’, ‘ஐஓபி தந்த செல்வமும் கல்வியும்’ மற்றும் ‘விட்டு விடுதலையாக…’ என நான்கு ஆல்பங்களாகத் (album) தொகுத்துவைக்க நினைத்தேன். ………………

…………………………..

 தரம், முழுமை, நயம், தொடர்ச்சி மற்றும் தொடர்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாழ்க்கைச் சித்திரங்களைத் தொகுத்து ஆல்பங்களை உருவாக்கத் துணை புரியுமாறு கடவுளிடம் பிரார்த்தித்துத் துவங்கியிருக்கிறேன். “

………………………………..

2 thoughts on “Home

  1. Really very good. Great initiative. Got an opportunity to know about your old memories. Also, I hope that your childhood memories will certainly have some portion, related to my grand mother and my father. I am interested in following your album. Will it be published on regular frequency (say once in a week or month

    Like

Leave a Reply to Lalitha Sitaraman Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s